பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது.
அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண் ஒருவர். மறுநாள், சீரழிக்கப்பட்டு, சாலையோரமாக தான் விழுந்துகிடப்பதை அறிந்தபோது, அவரது வாழ்வே மாறிப்போனது. இன்னொரு பெண் கண்விழித்தபோது, தான் யாரோ ஒருவரின் கட்டிலில் கிடப்பதைக் கண்டு நொறுங்கிப்போனார்.
அதுமட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது தொடர்பான 20,000 புகார்கள் பதிவும் ஆகியுள்ளன. ஆனால், விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையோ, 2018இல் 25இல் 1ஆக இருந்தது, 2022இல் 400இல் ஒன்றாக குறைந்துள்ளது.
விடயம் என்னவென்றால், இப்படி பானங்களில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கும் குற்றங்களுக்கெதிராக தனியாக சட்டம் எதுவும் இல்லை.
அப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பாலியல் குற்றம், அல்லது தாக்குதல் போன்ற ஏதாவது ஒரு குற்றப்பிரிவின்கீழ்தான் தண்டிக்கப்படும் நிலை உள்ளது.
அப்படி தண்டிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
ஆகவே, இப்படி பானங்களில் மயக்க மருந்து கலந்து சீரழிக்கும் குற்றங்களுக்கென தனியாக சட்டம் தேவை என பிரித்தானியாவில் போரப்பட்டுள்ளது.