இலங்கை அரசியல்வாதிகள் இருவருக்கு அமெரிக்க விசா வழங்குவதில் சிக்கல்!

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு விசா வழங்குவது கடினம் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர்களின் பயிலரங்கில் பங்கேற்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் இவ்விருவரையும் பரிந்துரைத்திருந்தது.

எனினும் விசா நிராகரிக்கப்பட்டதையடுத்து இருவரும் அமெரிக்கப் பயணத்தை இரத்து செய்துள்ளனர். குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் எதிரான வழக்கு காரணமாக அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதுடன் யுத்த காலத்தில் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவரது விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor