வாகன இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய அறிவிப்பு!

தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தற்போதைக்கு நீக்கப்படாது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி
நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

எவ்வாறெனினும், தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் போதியளவு வாகனங்கள் காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு போன்ற காரணிகள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்து அதன் அடிப்படையில் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் தற்போதைக்கு தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor