நெதர்லாந்திடம் தோற்றதுதான் டா உண்மையான தென்னாப்பிரிக்கா..

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது மிகப்பெரிய அப்செட்டாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. ஏற்கனவே இந்த தொடரில் ஆப்கானிஸ்தானிடம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

தற்போது இரண்டாவது மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவராக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை எடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரமஜித் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ் ஓ தாவூத் 18 ரன்களிலும் காலின் அக்கர்மேன் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அந்த அணி வீரர்கள் தடுமாறிய போது கேப்டன் எட்வர்ட்ஸ் மட்டும் அபாரமாக நின்று 78 ரன்கள் விளாசினார்.

நெதர்லாந்து அணி 34 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழடபபிற்கு 141 ரன்கள் எடுத்து இருந்தது. ஆனால் எட்வர்ட்சின் மேஜிக் காரணமாக கடைசி 9 ஓவரில் 104 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 43 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. கேப்டன் பெவுமா 16 ரன்களிலும், குயிண்டன் டி காக் 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டூசன் 4 ரன்களில் வெளியேற ஏய்டன் மார்க்கரம் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 44 ரன்களை சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிச் கிளாசன் ஜோடி பொறுமையாக நின்று அணியை சரி விலிருந்து மீட்டனர். இந்த நிலையில் முக்கியமான கட்டத்தில் கிளாசென் 28 ரன்களில் வெளியேற அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 43 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

இதனால் தென்னாப்பிரிக்க அணி தோல்வி முகத்தில் இருந்தது. எனினும் தென்னாப்பிரிக்காவின் கீழ் வரிசை வீரர்கள் போராடி வெற்றி பெற முயற்சித்தனர். ஆனால் நெதர்லாந்து அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவை 207 ரன்களில் சுருட்டினர். இறுதியில் கேசட்வ மகாராஜா போராடி 40 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணி தற்போது தோல்வியை தழுவி இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி எப்போதுமே எதிர்பாராத நேரத்தில் இவ்வாறு அதிர்ச்சி தோல்வியை தழுவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே டி20 உலக கோப்பை போட்டியில் இதே நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் அந்த அணியை ரசிகர்கள் சோக்கர்ஸ் என்று அழைப்பார்கள்.

Recommended For You

About the Author: admin