அரசின் தலையீட்டுடன் வெதுப்பக உணவுகளின் விலையை குறைக்க இயலும்!

அரசாங்கம் தலையீடு செய்யுமாயின் பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

காரணம்

வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. பாண் மற்றும் பணிஸ் என்பனவற்றை பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது.

அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையினை குறைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor