போலித் தமிழ்த் தேசியவாதிகள் மீது சிவசேனை சீற்றம்!

400 வருடங்களுக்கு முன் பறங்கிகளின் படையெடுப்பின் போது உலகத்தில் உள்ள இந்துக்கள் பாரிய மனித அவலத்தை சந்தித்தார்கள்.  ஆனால்,  இன்று பெரும்பாலானோர் சுயமரியாதை, சுய உரிமை, இனவழிப்பு செய்த பறங்கிகளைத் தட்டிக்கேட்கும் அளவில் பிரமித்துள்ளார்கள் என சிவ சேனையின் சிவதொண்டன் பாலசிங்கம் ஜெயமாறன் தெரிவித்தார்.

 

இலங்கை சிவசேனை அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :

 

400 வருடங்களுக்கு முன் பறங்கிகளின் படையெடுப்பின் போது உலகத்தில் உள்ள இந்துக்கள் பாரிய மனித அவலத்தை சந்தித்தார்கள்.  ஆனால்,  இன்று பெரும்பாலானோர் சுயமரியாதை, சுய உரிமை, இனவழிப்பு செய்த பறங்கிகளைத் தட்டிக்கேட்கும் அளவில் பிரமித்துள்ளார்கள்

 

இன்று அப்படி இருந்தும் வடக்கு –  கிழக்கு மலையத்தில் உள்ள இந்துக்கள் எந்த விதமான முயற்சியும் இன்றி போலித் தமிழ்த் தேசியவாதிகளால் தொடர்ந்தம் ஏமாற்றப்பட்டு அரசியல் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

 

அதன் மூலம் நிலையான அரசியலை அடையலாம் என்ற உயரிய சிந்தனையில் செயல்படுபவர் சச்சிதானந்தன் அவரின் உயரிய செயற்பாட்டினால் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

 

இது ஒரு ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் ஒரு நல்ல வரப் பிரசாதம் அத்தோடு நீண்ட நாள் கனவு ஒரு பகுதி நிறைவு பெறுகிறது

இன்றைக்கு இராணுவ முகாம்களுக்கு அதிகமாக மதம் மாற்ற பாசறைகள் முளைத்து அப்பாவி தமிழர்களை மதமாற்றம் செய்யும் போது ஏன் நிரத்தம் இனமாற்றம் செய்யப்படுகின்றது.

 

என்று ஒரு துளி கூட கவலை அடையாமல் மதமாட்டி எனக்கு துணை போகும் போலி தமிழ் தேசியவாதிகள் வாழும் சூழலில் சச்சிதானந்தம் ஐயாவின் செயல் பாராட்டத்தக்கது வரவேற்கத்தக்கது.

 

தமிழ் மக்கள் சிந்தித்து செயல்படும் காலம் நெருங்கிவிட்டது இவ்வளவு காலமும் போலியா போலி தமிழ் தேசியவாதிய நம்பி ஏமாந்தது போதும் அவர்களை விரட்டி விட்டு சச்சிதானந்தம் ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

 

அப்பொழுதுதான் தமிழன் தனது அடையாளங்களை தொலைக்காமல் தலைநிமிந்து வாழ்வார்கள் ஒளியைப் பெற்றுத் தருவர் அத்தோடு நாம் காணும் கனவுகள் நனவாகும் பறங்கிய உலகத்தை எப்படி ஏமாற்றி ஆளுகிறார்கள் அதே போல் இந்துக்களும் தர்மத்தின் படி உலகத்தை ஆள்வார்கள் – என்றார்.

Recommended For You

About the Author: S.R.KARAN