இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை விடுவிக்குமாறு கோரி காதலன் பொலிஸாரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், இந்த கடத்தலில் ஈடுபட்ட 40 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டு, கடத்தல் மற்றும் கப்பம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பெண் கடத்தல்
இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தம்பதியினர் தங்கள் காரை நிறுத்தியுள்ளனர். இதன் போது இலங்கையர் காரணமின்றி அந்த தம்பதியிடம் பணம் கேட்டு, தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆணும் பெண்ணும் பணம் செலுத்த எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், காரில் இருந்த பெண்ணை இறங்கச் செய்து, தன்னுடன் அழைத்துச் சென்று இலங்கையர் அச்சுறுத்தியுள்ளார்.
பொலிஸில் தஞ்சம்
கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றுமாறு கண்ணீருடன் காதலன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் காதலியின் கையடக்க தொலைபேசி ஊடாக இலங்கையர் தங்கியிருந்த இருப்பிடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.