மட்டக்களப்பில் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிட்டிய சுமன ரதன தேரர் தலைமையிலான குழுவினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் தகவல் திரட்ட வருகைத்தந்த பெண் ஊடகவியலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
இதற்கமைய போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு வீதித் தடைகளும் போடப்பட்டிருந்தன.
எனினும், அங்கு அவர் பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்.
கூச்சலிட்ட சுமன தேரர்
இதேவேளை, இந்த போராட்டத்தில் தும்புத்தடிகளோடு, அம்பிட்டிய சுமன ரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் களமிறங்கியிருந்தனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டவர்களை, தகாத வார்த்தைகள் கொண்டு அவர் கூச்சலிட்டிருந்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமன ரதன தேரர்,
“இனவாதத்தை தூண்டி மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதனால் உனக்கு சொல்கின்றேன். நீ சாணக்கியனின் சிஷ்யரல்லவா? என்னை படம்பிடிக்கும் நீ சாணக்கியனின் சிஷ்யரல்லவா?
நட்சத்திரங்களை அணிந்து கொண்ட நரிகள்
இதனை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்பவர் நீ அல்லவா? கொண்டு கொடுங்கள்? சாணக்கியனிடம் கொண்டு கொடுங்கள்.
சாணக்கியனை டயஸ் போரவிற்கு அனுப்பி அதன்மூலம் கொஞ்சம் பணம் பெற்றுக் கொள்ளுமாறு சொல்லுங்கள்.
நாம் இவ்வாறான ஒரு பிரச்சினை பற்றியே பேச வருகின்றோம். இந்த காரணத்திற்காகவே நாம் வாதாடுகின்றோம், கூச்சலிடுகின்றேம்.
அது தவிர எந்த ஒரு நபருக்கும் அல்லது எந்த ஒரு இனத்திற்கும் எதிராக நாம் செயற்படவில்லை.
இவ்வாறான முதுகெழும்பு இல்லாத ஜனாதிபதிக்கும் அவருக்கு சேவை செய்யும் இவ்வாறானவர்களுக்கும் ஒன்றைச் சொல்கின்றேன்.
“கோட் அணிந்து ஆடையில் நட்சத்திரங்களை அணிந்து கொண்ட நரிகள் இவர்கள்” முதுகெழும்பு இல்லாதவர்களையே நாம் நரிகள் என்போம்.” என தெரிவித்துள்ளார்.