அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் (Sujiharan Thambirajah) 260 கோடியுடன் வங்கிக்கு சென்ற சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெருந்தொகை பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வங்கியில் வைப்பிலிட்ட சம்பவம் வெளிப்பட்டதை தொடர்ந்து, குறித்த தமிழர் (Sujiharan Thambirajah) அங்கு குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
பொலிஸார் விசாரணை
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாதாரணமான நபரான அவர் (Sujiharan Thambirajah) , இவ்வளவு பெருந்தொகை பணத்தை எப்படி வைப்பிலிட முடிந்தது என, பொலிசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
அவர் 8 மில்லியன் அமெரிக்க டொலரை ( 259,18,92,000.00 இலங்கை ரூபா) வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். அவர் பணம் வைப்பிலிட்டதை கண்காணித்த அவுஸ்திரேலியாவின் இரகசிய பொலிசார், அவர் பெருந்தொகை பணத்தை வைப்பிலிடும் காட்சிகளை இரகசியமாக காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
குறைத்த 2022 குளிர்காலத்தில் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் இரகசிய கண்காணிப்புக் குழுக்களால் சிட்னியின் மேற்குப் பகுதியில் (Sujiharan Thambirajah) பின்தொடரப்பட்டுள்ளார்.
8 மில்லியன் டொலரை வைப்பிலிட்ட தமிழர்
எனினும் தன்னை பொலிசார் பின்தொடர்வதை அறியாக அவர் , ஜூன் 2022 இல் இரண்டு வங்கிகளில் 8 மில்லியன் டொலர் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
ஒரு வெஸ்ட்பேக் கிளையின் உள்ளே, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பெரிய மூட்டைகளைக் கொடுப்பதை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன் பின்னர் அவர் (Sujiharan Thambirajah) மற்றொரு இடமான சென்ட் ஜோர்ஜ் வின்ஸ்டன் ஹில்ஸ் கிளையில் அதிக பணத்தை ஒப்படைத்தார்.
இதன்போது, அவர் (Sujiharan Thambirajah) தனது போனில் 34,400 டொலர் என்று கணக்கிடுவதை இரகசிய பொலிசாரின் கமரா படம் பிடித்தது.
இந்நிலையில் சந்தேக நபர் இவ்வளவு தொகையை எப்படி சேர்த்தார்?, இவ்வளவு பெரிய தொகையை வைப்பு செய்ததன் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பொலிசார் இது பற்றி விசாரித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த பெரிய தொகையானது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் பெறப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
அதேசமயம் குறித்த தமிழர் பணமோசடி அல்லது வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் (Sujiharan Thambirajah) கடுமையான சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.