நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மழையினால் தாழ்வான பகுதிகளில் மரக்கறிப் பயிர்களும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல மாகாணங்களில் அடை மழை
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் தோட்டங்கள் முற்றாக அழிந்து விட்டதாகவும், நாட்டின் மொத்த வெண்டைக்காய் தேவையில் 40 சதவீதத்தை இந்த பயிர்ச்செய்கை மூலம் பெற்றிருக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை அண்மைய நாட்களாக நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், தற்போது பல மாகாணங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக அறுவடைக்கு தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.