சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எமவும் அவர் கூறினார். இது தொடபில்ல் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல்
அண்மைக் காலமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதோடு சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்தமான நீர் மற்றும் உணவினை எடுத்துக்கொள்வதன்மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் கூறினார்

Recommended For You

About the Author: webeditor