கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமானதால் அரசாங்கத்திற்கு 195 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் தாமதமானதால் விமானப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து விசாரிப்பதற்கான கலந்துரையாடல் நேற்று (02.03.2023) அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
விமானங்கள் தாமதமானதன் காரணமாக தற்போது ஊழியர்களுக்கு கொடுப்பனவோ அல்லது சம்பள அதிகரிப்போ வழங்க முடியாது.
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் தனது உரிமைகளை தக்கவைத்துள்ளதாகவும், இந்த விமான கால அட்டவணையை பராமரிக்கும் உரிமையை மற்றொரு விமான நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கடனாக உள்ளது. அதற்கான வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.
விமான சேவையின் உற்பத்தித்திறனை அதிகரித்தால், உற்பத்தித்திறன் அடிப்படையில் சில கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.