இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
தொழுநோயின் தாக்கத்துக்கு உள்ளான சிறார்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தொழுநோயாளிகள் சிகிச்சை பெறக் கூடிய ஒரே வைத்தியசாலை கொழும்பு தேசிய வைத்தியசாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.