கனேடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக வழக்கு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கனடாவின் பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதான ஜெமெயின் லெமேய் என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்த நபருக்கு எதிராக ஆயுத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மொன்றியால் நகரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் ஸ்கொட்ஸ்டவுன் பகுதியில் வைத்து இந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் மற்றும் மாகாண முதல்வருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இந்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பில் குற்ற குற்றச்சாட்டுக்கள் இன்னும் சுமத்தப்படவில்லை எனவும் ஆயுத குற்றச்சாட்டு தற்போது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதனை ஏற்க முடியாது என கியூபெக் மாகாண முதல்வர் லெகுலாட் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor