கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிய்யிடப்பட்டுள்ளது.
கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடு கொள்வனவு இயலுமை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நிதிச்சந்தைகள் குறித்த தேசிய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் பத்து பெருநகர பகுதிகளை அடிப்படைய்யாகக் கொண்டு ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
வருமானத்தையும் அடகுக் கடன் வீதம் என்பனவற்றை ஒப்பீடு செய்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டிலும் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
அடகு வட்டி வீதங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் காரணமாக வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமையில் பாரியளவு சரிவு பதிவாகியுள்ளது.