யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு கஹவத்தை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் , முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கஹவத்தை துப்பாக்கிசூடு
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் அந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை நடத்திய கஹவத்தை பொலிஸாரால் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன்போது , அவரை கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு, அழுத்தம் கொடுத்ததமை தொடர்பில் லலித் ஜயசிங்க மீது குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போதே, நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.