கனடா ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட பிக்கு

கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக கூறி வைத்தியர் உட்பட 3 பேரை ஏமாற்றி 26.2 மில்லியன் ரூபா மோசடி செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிராந்திய மோசடி குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க நீண்ட விசாரணையின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக பயணத்தை தடையை பெற்றுக்கொண்டனர்.

இதனடிப்படையில் சந்தேக நபரான் பிக்கு இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடாத்திய விசாரணையில் இவரிடம் இரண்டு கடவுச் சீட்டுகள் இருந்துள்ளன. அவற்றில் இல 49, யுனிட்13, சாலியாபுர வீதி, மொல்லிபதான மற்றும் 944/6, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல என இரண்டு விலாசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பிக்கு கனடாவில் தொழில் பெற்றுதருவதாக கூறி கொச்சிக்கடை பிரதேசத்தில் ஒருவரிடம் 72 இலட்சம் ரூபாவும் மற்றொருவரிடம் 40 இலட்சம் ரூபாவும் காலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் 15 மில்லியன் ரூபாவும் பெற்றுக்கொண்டு கனடாவுக்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளன.

சந்தேகநபரான சாலியபுர சந்திம தேரரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் அக்டோபர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor