கனடா செல்லும் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார்.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார்.

அதேவேளை ஐ.நா. சபை கூட்டத்தில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு உரையாற்றியபோது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். ஐ.நா. கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா அதிபர் ட்ரூடோ, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷியா மீது குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

அதேவேளை கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் தற்போது முதன்முறையாக ஜெலன்ஸ்கி கனடா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor