தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன.

இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க அந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதில் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் சுகாதார சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, மருந்துப் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

Recommended For You

About the Author: webeditor