வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமானார்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் இன்று (வயது 86) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor