இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு என்பவற்றுக்கு அறிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உத்தரவு விடுத்துள்ளார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் ஜனாதிபதியின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளுக்கும் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

இனிமேல் அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும் போதும் செயல்படுத்தும் போதும் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுக்களுக்கு அது குறித்து அறிவித்து அவர்களின் ஒத்துழைப்புடனும் ஒருக்கிணைப்புடனும் செயல்படுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தனது கடிதத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor