பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் 4 பதிலமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோணும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனுாப பெஸ்குவலும் நியமிக்கப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: webeditor