இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான மாலைத்தீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
மாலைத்தீவில் உள்ள மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததுடன், உலகில் மாலைத்தீவு மக்கள் வாழும் சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் பெருமளவான மாலைத்தீவு மக்கள் வாழ்கின்றனர்.
கல்வி, தொழில் உட்பட பல்வேறு துறைகளில் மாலைத்தீவு மக்கள் இலங்கையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சூழலில் அவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாலைத்தீவு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
கொழும்பில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் வாக்களிப்பதற்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
வாக்களிப்பதற்காக 850 மாலைத்தீவு பிரஜைகள் பதிவுசெய்திருந்த நிலையில் இன்று அவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக இலங்கையில் உள்ள மாலைத்தீவு உயர்ஸ்தானிகராலயத்தில் அறிவித்துள்ளது.
இவர்களது வாக்குப்பதிவு தொடர்பிலான தகவல்கள் மாலைத்தீவு தேசிய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படவுள்ளது.