இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள செய்தி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களை அரசாங்கம் பணியில் இணைக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது மின்சார சபையில் வெற்றிடமாகவுள்ள பணியிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை இணைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சபை தெரிவிக்கின்றது.

தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்டவர்களில் 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு ஆட்சேர்ப்புக்கு தேவையான அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த ஆண்டும் வறட்சியான ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் தனியாரிடமிருந்து தேசிய மின்கட்டமைப்பிற்கு குறைந்த விலையில் மின்சாரத்தை பெற மின்சார சபை தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.

அடுத்த வருடம் மே மாதத்துக்குள் 40 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் நிலக்கரி கொள்முதல் முன்னேற்றம், நிதி நிலைமை மற்றும் அடுத்த 12 மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor