சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 17 ஆம் திகதிகளில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவுடன் தொடர்ந்து இணக்கத்தை எதிர்பபார்க்கின்ற நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகிறது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்

கடந்த வருடம் ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

ஜனாதிபதி ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ மட்டத்தில் விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா, இலங்கைக்கு உதவுமென நம்புவதாக வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனா கொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக முன்னேறி வருவதாக சப்ரி கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor