கொழும்பு வாகன உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை!

கொழும்பில் வாகன உதிரிப்பாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகளவு முறைப்பாடுகள் பதிவு
குறிப்பாக மோட்டர்சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் போன்றவற்றின் கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படுகின்றமை தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னதாக வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor