ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம், தனிப்பட்ட தகவல்களைக் கேட்டு மோசடி செய்பவர்களிடம் கவனமாக இருக்குமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் வலியுறுத்துகிறது.
சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அமைப்பின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி மோசடியான மற்றும் தவறான தகவல்கள் மீண்டும் பரப்பப்படுவதை அவதானித்ததாக அமைப்பு அறிவித்துள்ளது.
எனவே, தங்கள் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பணத்தைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளமையினால் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு செயல்முறை
ஐக்கிய நாடுகள் சபை தனது ஆட்சேர்ப்பு செயல்முறையின் எந்தவொரு கட்டத்திலும் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் சீட்டிழுப்பு அல்லது பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் தொடர்புடைய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.