இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து கனடா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
புலம்பெயர் இலங்கைத் தமிழர்களுடன் கனேடிய பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அண்மைய இலங்கை சூழ்நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் கனடாவின் வகிபாகம்
சட்ட ரீதியானதும் தொடர்ச்சியானதுமான வகையில் நல்லாட்சி, சமாதானம், மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புகூறல் என்பனவற்றை நிலைநாட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சவால் மிக்க தருணத்தில் இலங்கைக்கு கனடா எவ்வாறான வகிபாகத்தை வகிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் கனேடிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.