நேற்றையதினம் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
அந்தவகையில் பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.
33 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி
இதற்கமைய விஞ்ஞானப் பிரிவில் முறையே ஆனந்தஜோதி வித்தியாசாகர், கண்ணன் பவிதரன், நாகசேன்னன் சாரங்கன், தர்மலில்கம் அமலன், ரகுதாதன் தனுசன் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.
கணிதப் பிரிவில் சிறிபண்டாகரன் சிநேகன், லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் திபேக், மொஹமட் நிஸ்பார் மொஹமட் இஸ்சாத் ஆகியோர் முதல் 5 இடங்களையும் பெற்றுள்ளனர்.
அதேவேளை, விமலேஸ்வரன் கிசாலன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 33 பேர் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.