லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் 1 மெட்ரிக் டன் எரிவாயுவின் விலை 103 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அதன் காரணமாக எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இன்று முற்பகல் 10 மணியளவில் லிட்ரோ நிறுவனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விலை திருத்தம் எவ்வாறு இடம்பெறும் என்பது அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம்
இறுதியாக கடந்த ஜூலை மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டது.
அத்துடன் விலைச் சூத்திரத்தின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் விலை திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அப்போது எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.