சிங்கப்பூர் அதிபர் தேர்தலில்யாழ்ப்பாண தமிழரான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்துள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல்
சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இதன்படி நாடு முழுவதும் 1,264 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண வம்சாவளி தமிழர்
இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்படத்தக்கது.