கனடாவில் ஒன்பது வயதான டிக் டாக் பிரபலம் அறிய வகை குடல் நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்து தற்பொழுது பெல்லா தொம்சன் என்ற இந்த சிறுமிக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறந்தது முதல் குறித்த சிறுமி குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்.
இந்த சிறுமி டிக் டாக்கில் சுமார் 6.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுமியின் சமீபாட்டுத் தொகுதியில் பிரச்சனை காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறந்து மூன்று நாட்களேயான நிலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் இரண்டு வயதுக்கு உட்பட்ட காலத்திற்குள்ளேயே 30 தடவைகள் சத்தத்தை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவரது தாயார் தெரிவிக்கின்றார்.
பல்வேறு சந்தர்பங்களில் இனி உயிர்பிழைக்க சாத்தியமில்லை என மருத்துவர்கள் கைவிட்டு இருந்த நிலையில் பெல்லா மீண்டு வந்ததாக அவரது தாயாரான கய்லா தொம்சன் நெகிழ்வுடன் கூறுகின்றார்.
சுமார் எட்டு மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் பெல்லா ஆரோக்கியமாக இருப்பதாகவும் தைரியமாக இருப்பதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஏதோ அதிசயத்தினால் அவர் உயிர் பிழைத்து வாழ்ந்து வருவதாகவும் ஒவ்வொரு நாட்களையும் அதிசய நாட்களாகவே கருதுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.