கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு செவ்வாய்கிழமை (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி
அதே நேரம் கோதுமை மா ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரி 16 ரூபாவிலிருந்து 27 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிகளுக்கு இணங்க கடந்த ஜூன் மாதம் கோதுமை மா ‘விசேட பொருளாக’ வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.