சஜித் அணியில் கடும் முறுகல்

“அண்மை காலம் வரை எந்த முடிவும் இல்லாமல் இழுபறி நிலையில் சஜித் அணிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனையை பகிரங்கமாக சொன்னவர் சஜித் அணியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன.

இப்படியே போக முடியாது. கட்சியை விட மக்களை நாம் காக்க வேண்டுமென்றால் ஜனாதிபதியோடு இணைய வேண்டும் எனும் கருத்துபட பொதுவெளியில் பேசியது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் சஜித் அணிக்குள் இருக்கும் சிலர் ரணிலோடு இணைய திரை மறைவில் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இப்படி பேசியதில்லை. இன்றைய நிலையில் மக்கள் ஆதரவு சஜித் அணிக்கும், JVPக்கும் மட்டுமே உள்ளன.

இந்நிலையில்தான் ரோகினியின் பேச்சு பலரை சிந்திக்க வைத்தது. அதன்பின் திரைமறைவில் நடந்த பேச்சு வார்த்தைகளில் , அடுத்த தேர்தலில் சஜித்தை பிரதமர் வேட்பாளராகவும் , ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனால் சஜித் , பிரதமர் வேட்பாளராக போட்டியிட சற்று பின்னடிப்பதாகவும் , ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஆசைப்படுவதாகவும் தெரியவருகிறது. மகிந்தவின் கட்சி 13யை எதிர்க்கும் நிலையில் மொட்டுக்கான சிறுபான்மை வாக்குகள் மேலும் குறையும் நிலையே உள்ளது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் லங்சா தரப்பு மொட்டு கட்சியின் பலரை இணைத்து ரணிலுக்கு ஆதரவு தேட தொடங்கியுள்ளனர். JVP, பழைய கொள்கையை விட்டு இந்தியாவை ஆதரிக்க முற்பட்டுள்ளமையால் பழைய JVPயினர் சற்று மனக்கசப்பில் உள்ளனர்.

13வது திருத்தத்தை கொண்டு வந்த போது இந்தியாவை எதிர்த்து பலர் உயிர் துறந்தமை அவர்களது விரக்திக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் சஜித் அணிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு , இன்று ரணிலை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

அது தேர்தல் நேரம் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?” என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor