மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களின் வரிகள் நீக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிகளை அறவிடுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கால்கள், செயற்கைக் கைகள், வெள்ளை பிரம்புகள் மற்றும் செவிப்புலன் கருவிகள் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளவர்களால் எண்பத்தாறு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றில் இந்த நாட்டில் ஒரு சில மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor