விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சிக்கல் நிலையே என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் நபர்கள் பரிசோதிக்கப்பட்டாலும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைபவர்கள் பரிசோதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விமான நிலையத்தின் உள்ளக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.