கடந்த மாதம் முதல் ஒபெக் அமைப்பு தமது நாளாந்த உற்பத்தியை 1.2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக மசகு எண்ணெய் உற்பத்தி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவும் ஒரு மில்லியன் பீப்பாய்களால் தமது உற்பத்தியை குறைக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 86 அமெரிக்க டொலராக உள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை நேற்று 87 அமெரிக்க டொலரை அண்மித்திருந்ததாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.