அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து நோயாளர்களின் நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.