வவுனியா சிறைச்சாலையில் கட்டுப்பாடுகள் தளர்வு!

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில்,அம்மை நோயால் கைதி ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக சிறைச்சாலை திணைக்களத்தினால் வவுனியா சிறை வளாகத்திற்குள் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவிப்பு
கடந்த இரண்டு வாரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்றுடன் (07.08.2023) முடிவடையவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி நாளை (08.08.2023) முதல் வழமை போன்று அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்வருமாறுக் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, கைதிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இதனை துரிதமாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor