திடீரென இடித்து விழுந்த உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம்

உலகப்புகழ் பெற்ற வைஸ்ணவ தலங்களுள் முதன்மையான தலமான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.

நுழைவு வாயிலில் இடிந்து விழுந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கிழக்கு கோபுர சுவரில் ஏற்கனவே விரிசல்
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுர சுவரில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் இந்த அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திடீரென இடித்து விழுந்ததால் பரபரப்பு! | Srirangam Temple Gopuram Suddenly Collapsed

கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. நேற்று மாலை திருச்சி பகுதிகளில் 30 நிமிடங்கள் வரை நல்ல மழை பெய்தது.

உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திடீரென இடித்து விழுந்ததால் பரபரப்பு! | Srirangam Temple Gopuram Suddenly Collapsed

இதனால் விரிசல் அதிகமான நிலையில் முதல் நிலை கோபுரத்தின் சுவர் மளமளவென இடிந்து விழுந்தது. நள்ளிரவு 1.50 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடிந்த கோபுர சுவரினை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திடீரென இடித்து விழுந்ததால் பரபரப்பு! | Srirangam Temple Gopuram Suddenly Collapsed

அதேவேளை உலகளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில் ஸ்ரீரங்கம். வைணவவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor