இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை தணிக்கும் வகையில் இந்தியா தக்க நேரத்தில் உதவிகளை புரிந்து வருகிறது.
இதனால் இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போதும் 450 மில்லியன் இந்திய ரூபா நிதியை இலங்கைக்கு மானியமாக இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிதியை கையளித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.