காத்தான்குடியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை நினைவுக் கூறும் வண்ணம் காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

நகரின் பல இடங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாயல், காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் ஆகிய இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன்போது 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 268 முஸ்லிம்கள் படுகாயத்திற்குள்ளாகியிருந்தனர்.

இச் சம்பவத்தின் 33 ஆவது நினைவருட நினைவு தினம் இன்று ஆகும். காத்தான்குடி ஸுசைன்யா பள்ளிவாயல் மற்றும் மீரா ஜும்மா பள்ளிவாசல் ஆகிய இறுதி பள்ளிவாயல்களிலும் விசேட துவா பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இச்சம்பவத்தினை நினைவுக்கூற இடம்பெற்றது. அதே நேரம் காத்தான்குடி ஷூஹதாக்கள் சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor