கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி A9 வீதியில் வீசப்பட்டு நீண்ட காலமாக காணடப்பட்ட உக்காத பொலித்தீன் பொருட்கள் தொடர்பில் பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சுற்றாடல் பாதுகாப்பு தொர்பில் சமூகத்தின் கவனத்தை ஈக்கும் வகையிலும், சாரணிய மாணவர்களின் செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், மாணவர்கள் மத்தியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலான அறிவுசார் விருத்தியை வளர்க்கும் வகையிலும் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த பணியானது இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் துப்பரவு செய்யப்பட்டது.
குறித்த பணிக்கு கிளிநொச்சி வலயக் கல்வி பணிமனை, கரைச்சி பிரதேச சபை, சுகாதார துறையினர் ஒத்துழைப்பு வழங்கியதாக பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தெரிவித்தார்.
குறித்த பணியை முன்னெடுத்த கிளிநொச்சி மகாவித்தியாலய சமூகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.