ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொலனறுவை மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அமரக்கீர்த்தி அத்துகோரல , கடந்த வருடம் மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துக் கொண்டிருந்த சமயத்தில் அலரி மாளிகையிலிருந்து பொலனறுவையிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த போது நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து தாக்குதலுக்கிலக்காகி கொலை செய்யப்பட்டார்.
இதன்போது அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் சார்ஜன்ட் ஜெயந்த குணவர்த்தவும் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான 37 பிரதிவாதிகளுக்கு கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.