யாழில் திருமணம் என்ற போர்வையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந் நிலையில் அப் பெண் நீதிக்கான போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியை பூர்வீகமாக்கொண்ட ஜேர்மனில் வசிக்கும் நபர் ஒருவரே தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், விவாகரத்து தரும்படி மிரட்டல் விடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
[SSQPX5
இந்தியாவில் இடம்பெற்ற திருமணம்
கடந்த பங்குனி மாதம் இந்தியாவில் திருமணம் இடம்பெற்ற நிலையில் சீதனமாக வழங்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை குறித்த நபர் பெற்றுச்சென்றுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து தராது விடின் வாள்வெட்டுக் குழு வீட்டுக்கு வரும் என அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்திய தூதரகத்திடம் ஆலோசனை பெற்றுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.
தனக்கு நீதி வேண்டும் எனவும் தன்னைப் போல இனி எந்தப் பெண்ணும் இவர்களால் பாதிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.