வெளிநாட்டில் இருந்து நாடு திருபிய ஒருவரிடம் இருந்து அவர் கொண்டுவந்த அனைத்து பொருட்களும் முச்சக்கர வணி சாரதியால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு சுற்றுவட்டப்பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவைன் வீடு உள்ளதனால் ஆட்டோ சாரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவருக்கே தேனீர் வாங்கி கொடுத்து சாரதி கொள்ளையிட்டுள்ளார்.
மக்களே அவதானம்
சம்பவம் தொடர்பில் முகநூல்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளதாவது,
டுபாயிலிருந்து நேற்று முன் தினம் (20,07,23) நாடு திரும்பிய ஒருவரிடம் விமான நிலையத்தில் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் “எங்கு போகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்,
அதற்கு “இல்லை நான் இன்டர்சிட்டி பஸ்ஸில் பாணந்துறை செல்கிறேன்.” என்றாராம்! “ஆஹ், அப்படியா நான் களுத்துறை தான் செல்கிறேன் பெற்றோல் அடிக்க எவ்வளவாவது தாருங்கள்” என்று சொல்லவே சரி வாங்க போகலாம் என ஏறிச் சென்றிருக்கிறார்.
மாபோல ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி “நான் டீ குடிக்க வேண்டும்” என்று சொல்லி “நீங்கள் எப்படி?” என்று சாரதி கேட்டதற்கு பொருட்கள் இருப்பதால் நான் இருக்கிறேன் என்று கூறி தனக்கு ஒரு டீ வாங்கிவருமாறு கூறினாராம்.
தேநீர் அருந்திய ஞாபகம் மட்டுமாம், காலையில் மருதானை ஆனந்தா கல்லூரிக்கு அருகில் மயக்கமடைந்த நிலையில் அவரை பொலிஸாரிடம் சிலர் ஒப்படைத்துள்ளனராம்.
இரண்டு ஐ.போன்கள், ஒரு தங்கச் சங்கிலி, ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் கைவசமிருந்த ஒன்றரை இலட்சம் காசு என்பவை கொள்ளையடிக்கப் பட்டுள்ளனவாம்.
இவ்வாறான செய்திகளை அதிகம் நாம் கேட்கிறோம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விழிப்பாக இருத்தல் அவசியமாகும். இரண்டு மூன்று வருட உழைப்பு, சேமிப்புகள் மாத்திரமன்றி உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது .
உங்கள் உடமைகள் உயிர் மாத்திரமன்றி உங்கள் உறவுகளது விடயத்திலும் அவதானமாக இருந்து கொள்ளுங்கள், நாட்டிலும் விதவிதமான கொள்ளை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என குறித்த நபர் பதிவிட்டுள்ளார்.