கனடாவில் சைபர் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பல்வேறு நிறுவனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனடிய சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய வழிகளில் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சைபர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டி உள்ளது.
நிறுவனங்களின் கணினி கட்டமைப்புக்குள் பிரவேசித்து கப்பம் கோரும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனேகமான சைபர் தாக்குதல்களின் போது முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டு அவற்றை அடிப்படையாகக் கொண்டு கப்பம் கோரல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் சைபர் தாக்குதல்கள் மூலம் கப்பம் கோரப்பட்ட 305 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தமது நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல் இடம்பெற்ற சம்பவங்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.