சந்திரனுக்கு மனிதன் சென்று இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1969ஆம் ஆண்டு ஜூலை 20 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த முதல் மனிதர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
“இது மனிதனுக்கு ஒரு சிறிய படியாகும், ஆனால் இது மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என நீல் ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார்.
இந்த விண்வெளிப் பயணத்திற்கு 137 நாடுகள் பங்களித்துள்ளன.
இலங்கையின் வகிபாகம்
பேராசிரியர் சிரில் பொன்னம்பெருமாவினால் இலங்கையும் இந்த விடயத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக ஆர்தர் சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நிலவில் ஊண்றி எடுக்கப்பட்ட இலங்கை தேசியக் கொடி, நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது குழுவினால் இலங்கைக்கு நன்றி தெரிவித்த கடிதம் மற்றும் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள் ஆகியவற்றை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.