கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசங்களில் உள்ள திணைக்களங்களுக்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள சதாசிவம் வியாழேந்திரன்

வர்த்தக வாணிபத்துறை பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகள்,தேவைகள், மக்கள் நாளாந்தம் திணைக்களங்கள் சார்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் திணைக்களங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக நேரில் கண்டறிந்து அவற்றிக்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு திடிர் கள விஜயமொன்றினை இன்று மேற்கொண்டிருந்தார்.

இவ் நடவடிக்கை வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

பிரதேச மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் திணைக்களம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் விடுத்த வேண்டு கோளினை அடுத்து அவற்றினை கண்டறியும் பொருட்டும் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இவ் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை,இலங்கை போக்குவரத்து சபை,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,சமூர்த்தி வங்கி,பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிக்கு சென்று தலைமை அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகஸ்த்தர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வைத்தியசாலையில் நிலவும் மகற் பேற்று பிரிவிற்கு தேவையான நவீன வசதி கொண்ட சாதனங்களின் தேவைகள்,அதேபோன்று சிறு நீராக நோயாளர்களுக்கு பயன்படும் இரத்த சுத்திகரிப்பு சாதனம் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு ஆளணி தேவை தெடர்பாகவும் போக்குவரத்து சபையில் புதிய கட்டடம்,சாரதிகள் ஓய்வு எடுக்கும் விடுதி,மலசல கூட வசதி,என பல்வேறுபட்ட குறைபாடுகள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது சாலைக்குள் நீர் தேங்கி நிற்கும் வகையில் பள்ளங்கள் காணப்படுவதனால் அவற்றினை மூடுவதற்கு பிரதேச சபையின் செயலாளருடன் அமைச்சர் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து பள்ளங்களுக்கு கிறவல் இடும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.

சமூர்த்தி வங்கிக்கு சென்று வங்கி முகாமையாளர் மக்களின் நாளாந்த சமூர்த்தி கொடுப்பனவில் ஏற்படும் தாமதம்,சிரமங்களை நிவர்த்தி செய்வதற்குரிய வழிவகளை கண்டற்யுமாறும் மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை கண்டறிந்து அவர்களுக்கு சிரமமின்றி அவர்களது வீடுகளுக்கு சென்று சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

இதேபோன்று பிரதேச செயலாளர் மற்றும் சமூர்த்தி முகாமையாளரை சந்தித்து சமூர்த்தி முத்திரை,மின்சாரம் வழங்கல் மற்றும் காணிப்பிணக்குகள் தொடர்பாக பயணாளிகள் எதிர்நோக்கிய நீண்ட கால பிரச்சினைகளுக்கு திர்வு காணப்பட்டது.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோருக்கு அவர்களது நிலவரம்,வாழ்வாதாரம் தொடர்பாக அறிந்து கொள்ளாமல் சமூர்த்தி முத்திரையினை உடனடியாக வெட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவ் விடயத்தில் அவர்கள் பல கஸ்ரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மீள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரைக் கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று கோறளைப்பற்று பிரதேச சபைக்கு சென்று அங்குள்ள நிலவரம் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.அங்கு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டபோதிலும் குறிப்பாக பாசிக்குடாவில் உள்ள நட்சத்திர விடுதிகள் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சபைக்கு அவர்களது மொத்த வருமானத்தில் 1 வீததிற்குட்பட்ட திரட்டிய வீத வரியினை இது வரை செலுத்தமல் உள்ளதாகவும் இதேபோன்று வாழைச்சேனை மீன் பிடி துறைமுகமும் செலுத்தாமல் உள்ளதால் சபை நடவடிக்கைக்கு தேவையான நீதி போதாமல் உள்ளதாக கலந்துரையாடப்பட்டது.

எனவே குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள பிரிதொரு தினத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளுராட்சி அமைச்சின் உயர் அதிhரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து தீர்வு பெற்றுக்கொள்ள விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு சபையின் செயலாளரைக் கேட்டுக்கொண்டார்

Recommended For You

About the Author: webeditor