கல்முனை இரத்ததான முகாமில் பங்கேற்ற மக்கள்

வைத்தியசாலையில் ஏற்படும் குருதி வங்கியின் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 தொடக்கம் மாலை வரை கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில், மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் சமட் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இரத்ததான முகாமை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான், மஸ்ஜித் உப தலைவர் ஏ.எம்.ஏ. அத்னான், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான், செயலாளர் கே.எல். சுபையிர், வை.எம்.எம்.ஏ. பேரவை தேசிய உப தலைவர் எஸ். தஸ்தக்கீர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

மஸ்ஜித் நிர்வாகி இசட்.ஏ. நசீர் இணைப்பு செய்த இந்த இரத்த தான நிகழ்வில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை இரத்தவங்கி குழுவின் தலைமை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஜே.எப். றிஸ்மியா, உட்பட தாதியர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய இளைஞர்கள், பிரமுகர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

Recommended For You

About the Author: webeditor